பன்விலை நிருபர் ம.நவநீதன் ‪0772063840‬

கண்டி தமிழ் வர்த்தர் சங்கத்தினர் இம்முறை தீபாவளியைக் கொண்டாடும் வறுமைக் கோட்டின் கீழ் வாடும் மலையக மக்களுக்கு தீபாவளிப் பரிசாக உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்

தெரிவு செய்யப்பட்ட 1000 பேருக்கு இவ்வாறு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

கண்டி பன்விலை பிரதேசத்திலுள்ள மக்களுக்கு தீபாவளிப் பரிசுப் பொதிகள் வழங்கி.வைக்கும் நிகழ்வு பன்விலை பிரதான வீதி கிருஷ்ணா மண்டபத்தில் இடம்பெற்றது

இதனை பன்விலை பிரதேச சமூக சேவகர் செல்லமுத்துப்பிள்ளை சுரேஸ்குமார் ஏற்பாடு செய்திருந்தார்.

கண்டி தமிழ் வர்த்தர் சங்கத்தின் தலைவர் P குமரதாஸ்,
பொருளாளர் A.சிவசுப்ரமணியம், செயலாளர் P. இராமராஜ், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பலரும் பரிசுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.

ஆத்தளை,பன்விலை,றக்ஸாவ,நெல்லிமலை,சோழங்கந்த,கலாபொக்க,பீங்கந்த போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த பொது மக்கள் தமக்குரிய பொதிகளைப் பெற்றுக் கொண்டு பயனடைந்தனர்.

பொருளாதாரப் பிரச்சினையை எதிர்நோக்கி வரும் இக்காலகட்டத்தில் கிடைக்கப்பெற்ற இந்த உதவியானது பேருதவியாக அமைந்ததாக கலந்து கொண்ட மக்களில் பலர் ஆனந்தக் கண்ணீர் மலக கருத்துக்களை முன் வைத்தனர்

இது சபையை நெகிழ்ச்சியூட்டுவதாக அமைந்தது. வாயாற தமது நன்றிகளையும் வாழ்த்துக்களைம் கண்டி தமிழ் வர்த்தர் சங்கத்தினருக்கும் பன்விலை பிரதேச சமூக சேவகர் செல்லமுத்துப்பிள்ளை சுரேஸ்குமாருக்கும் பொது மக்கள் கூறிச் சென்றனர்.

மலையகத்தின் பல்வேறு பிரதேசங்களில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது.கடந்த பல வருடங்களாக இவ்வாறு பொது மக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பன்விலை நிருபர் ம.நவநீதன்