இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய ரீதியில் அதிகப்படியான பெண்கள் மார்பகப் புற்று நோயினால் பாதிக்கப்படுவதாகவும் இலங்கையில் ஒரு நாளைக்கு மூன்று பேர் மரணிப்பதாகவும் தினசரி 15 நோயாளிகள் இனம் காணப்படுவதாகவும் ஆய்வறிக்கையில் மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது
இந்த நோய் இள வயதிலேயே கண்டுபிடிக்கப்பட்டால் அதனை குணப்படுத்த முடியும் எனவும் பெண்கள் தினசரி சுய பரிசோதனை மூலம் இந்த நோயிலிருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும் எனவும் விழிப்புணர்வு நிகழ்வின் போது பிரதம அதிதியால் கருத்து முன் வைக்கப்பட்டது
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரா முரளீஸ்வரன் சிறப்பு அதிதியாக மண் முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி வி சிவப்பிரியா மற்றும் விசேட வைத்திய நிபுணர்கள் சுகாதாரப் பிரிவினர் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்
மார்பகப் புற்றுநோயின் பாதிப்புகள் பற்றி விசேட வைத்திய நிபுணர் எஸ் ஸ்ரீதரன் அவர்களால் இங்கு விசேட விளக்கவுரை நிகழ்த்தினார்.
மட்டக்களப்பு வரதன்






