மடகஸ்கார் ஜனாதிபதி ஆண்ட்ரி ரஜோலினா நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
பொதுமக்களின் போராட்டங்களுக்கு மத்தியில் அரசியல் நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், இந்த வெளியேற்றம் நிகழ்ந்துள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்திற்குப் பிறகு அரசியல் தஞ்சம் கோரி அவர் பிரான்சுக்கு தப்பிச் சென்றதாக அந்நாட்டில் செய்தி வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மடகாஸ்கர் இராணுவத்தின் கேப்சாட் (CAPSAT)பிரிவு முழு இராணுவத்தையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
