மியன்மர் குண்டுத் தாக்குதலில் 40 பேர் உயிரிழப்பு

மியன்மர் குண்டுத் தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

மியன்மாரில்  மத பண்டிகையின்போது, அந்நாட்டின் இராணுவம் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்பட 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும், 80 -க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய மியான்மாரின் சாங் யூ நகரில் மத திருவிழாவுக்காக நூற்றுக்கணக்கான மக்கள்  நேற்று முன்தினம் (6) மாலை அப்பகுதியில் கூடியிருந்தனர்.

இதன்போது, இரவு 7 மணியளவில் மியான்மார் இராணுவத்தினர் பாராகிளிட்டர் மூலம் வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில், குழந்தைகள் உள்பட 40 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு மேலும், 80 -க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெடிகுண்டு தாக்குதல் நடக்க இருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, கூட்டத்தில் இருந்த மூன்றில் ஒரு பங்கு மக்கள் அங்கிருந்து ஓடியதால் பலர் உயிர்தப்பியுள்ளனர்.