ஹூங்கம வீடொன்றில் தம்பதியர் சடலங்களாக மீட்பு

ஹுங்கம கொலை தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹுங்கம, வடிகல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கூரிய ஆயுதங்களால் தம்பதியினர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேக நபர்கள் இன்று (07) காலை கைது செய்யப்பட்டதாக ஹூங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

கைதான பிரதான சந்தேக நபர் “அதுபெலேன பிந்து” என்ற புனைபெயரில் அறியப்படுகிறார். 

அவர் அந்த பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர் என்பதும் தெரியவந்துள்ளது. 

ஹுங்கம, வடிகல பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று அதிகாலை இரட்டைக் கொலை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.