இந்தியாவின் புது டில்லியில் நடைபெற்ற பரா உலக சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இலங்கை விளையாட்டு வீரர்கள் இன்று (7) நாட்டை வந்தடைந்துள்ளனர்.
செப்டம்பர் 27 முதல் ஒக்டோபர் 5 வரை நடைபெற்ற இந்தப் போட்டியில் 100 நாடுகளைச் சேர்ந்த 980 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
நீளம் தாண்டுதலில் நுவான் இந்திகா வெண்கலப் பதக்கத்தையும் 1,500 மீட்டர் ஓட்டத்தில் பிரதீப் சோமசிறி வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார்கள். இது ஆசிய சாதனையாகும்.
பாரா உலக சம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் அனைத்து விளையாட்டு வீரர்களையும் விமான நிலைய வளாகத்தில் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இலங்கை பரா குழுவின் தலைவர் உள்ளிட்டோர் வரவேற்றுள்ளார்.
