இலங்கையில் பிறப்பு வீதம் மூன்றில் ஒன்றாகக் குறைவு அடைந்துள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் குழந்தைகள் பிறப்பு வீதம் மூன்றில் ஒன்றாகக் குறைந்துள்ளது.
பதிவான குழந்தைகள் பிறப்பு 320,400 இலிருந்து 2018 இல் 220,761 ஆகக் குறைவடைந்துள்ளதாகப் புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய குழந்தைகள் பிறப்பு வீதம் ஒப்பீடடளவில் கொரோனா காலத்திற்கு முந்தைய காலத்தைவிட மிகவும் குறைவடைந்துள்ளதாகக் குடிசன மதிப்பீட்டுப் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
