நாரம்மல – குருநாகல் வீதியின் நாரம்மல நகருக்கு அருகில் இன்று (5) காலை இடம்பெற்ற பஸ் லொறி விபத்தில் மூவர் பலி யானதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குருநாகலில் இருந்து நாரம்மல நோக்கி பயணித்த லொறி கட்டுப்பாட்டை இழந்து வீதியின் வலது பக்கத்தில் கட்டுநாயக்கவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த இபோச பஸ்ஸுடன் மோதியுள்ளது.
விபத்தில் லொறியின் சாரதி, ஓர் ஆடவர், 2 பெண்கள், இரண்டு குழந்தைகள் காயமடைந்த நிலையில் நாரம்மல மற்றும் குருநாகல் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், லொறியின் சாரதி, ஆண் ஒருவர், பெண் ஒருவருமாக மூவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர்கள் பொலன்னறுவையைச் சேர்ந்த, 41, 80 மற்றும் 82 வயதுடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
லொறியில் பயணித்த 40 வயதுடைய பெண், 16 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுமிகள் இன்னும் குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சடலங்கள் நாரம்மல மற்றும் குருநாகல் வைத்தியசாலைகளின் பிரேத அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.
பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் நாரம்மல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
