மஸ்கெலியா சென் ஜோசப் கல்லூரியின் பரிசளிப்பு விழா இன்று (3) வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மஸ்கெலியா டி.எம்.டி கலாசார மண்டபத்தில்வெகு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வுக்கு வித்தியாலய அதிபர் பி.நடராஜ் தலைமை தாங்கினார்.
விசேட அதிதியாக ஹட்டன் கல்வி திணைக்கள பணிப்பாளர் டி.எம்.என்.சி.குமார கலந்து கொண்டார்.
மேலும் வலய பணிப்பாளர் நாயகம், இப் பகுதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் அதிபர்கள், மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.புஸ்ப்பகுமார, வங்கி முகாமையாளர்கள், மஸ்கெலியா மாவட்ட வைத்திய அதிகாரி எம்.எச்.இர்ஷாட்., கல்லூரியின் ஆசிரியர்கள், ஆரம்ப கால அதிபர் திருமதி ராதா வெளிங்டன் இக் கல்லூரிக்கு வித்திட்ட முன்னாள் சென் ஜோசப் தேசிய கல்லூரியின் செயலாளர் செட்டியாபிள்ளை திருக்கோண பெருமாள் J.P உட்பட மஸ்கெலியா பிரதேச சபையின் செயலாளர் எஸ்.ராஜவீரன், பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
பிரதம அதிதி, மற்றும் அதிதிகள் பாடசாலை பாண்ட் வாத்தியங்கள் உடன் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
தொடர்ந்து அதிபரின் வரவேற்புரை, பிரதம அதிதி அவர்களின் உரை அதனைத் தொடர்ந்து நடந்து முடிந்த தரம் ஜந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 41 மாணவர்கள் சான்றிதழ் பதக்கங்கள் அணிவித்துக் கௌரவிக்க பட்டனர்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்








