2000 சம்பளம் கோரி தொழிலாளர்கள் ஜனாதிபதிக்கு தபாலட்டை

2000 சம்பளம் கோரி தொழிலாளர்கள் ஜனாதிபதிக்கு தபாலட்டை அனுப்பிவைத்துள்ளனர்.

நேற்றுப் பகல் 12 மணிக்கு மஸ்கெலியா பகுதிகளில் இருந்தும் கொட்டகலை பகுதியில் இருந்தும் நாட்டின் தலைவர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு பெருந்தோட்ட தொழிலாளர்கள் தபாலட்டை அனுப்பினர்.

அதில் தங்களுக்கு நாளாந்தம் ஆகக் குறைந்த சம்பளமாக தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திடமிருந்து 2000/= பெற்றுத் தர நீங்கள் கவனம் செலுத்த வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

மஸ்கெலியா அஞ்சலகத்திலும் கொட்டகலை அஞ்சலகத்திலும் தபால் அட்டைகள் அனுப்பி வைக்க பட்டன.

தபால் அட்டைகள் அனுப்பிய பின்னர் ஊடகங்களுக்கு பெருந்தோட்ட தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில்:

கடந்த 202 ஆண்டுகளாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் தங்களது வேதனத்தை போராடிப் பெற்று வந்து உள்ளோம்.

இம் முறை நாட்டின் தலைவர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன் வந்து பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனத்தை முதலாளிமார் சம்மேளனத்திடமிருந்து ஆகக் குறைந்த சம்பளமாக 2000/=பெற்று கொடுக்க வேண்டும் என்றார்கள்.

மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்

.