சிவனேஸ்வரா தமிழ் வித்தியாலய வாணி விழா

அதி கஷ்டப் பிரதேச பாடசாலையான கண்டி பன்விலை நெல்லிமலை சிவனேஸ்வரா தமிழ் வித்தியாலய வாணி விழா நிகழ்ச்சிகள் பாடசாலை அதிபர் ம. நவநீதன் தலைமையில் இன்று (02) வெகு விமரிசையாக நடைபெற்றன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வத்தேகம கல்வி வலய EPSI நிகழ்ச்சித் திட்டப் பொறுப்பதிகாரி திருமதி S.ரஞ்சிதமலர் கலந்துகொண்டார்.

சமூக சேவகர் திரு திருமதி சேது யோகி தம்பதி கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டு மாணவர்கள் அனைவருக்கும் கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

பன்விலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி A.B.ரட்நாயக்க உட்பட்ட முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.மாணவர்களின் வில்லிசை,நாடகம், நடன நிகழ்ச்சிகள் விழாவை சிறப்பித்தன.

பன்லிலை நிருபர் ம நவநீதன்