கரூர் சம்பவம் தொடர்பில் சி.பி.ஐ விசாரணை அவசியம் என்று ஓக்கடத்தேவர் பன்னீர்செலவம் தெரிவித்துள்ளார்.
கரூர் தமிழக வெற்றிக் கழக கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை சந்தித்த பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,
நேற்றைய தினம் (27) இடம்பெற்ற துயரச் சம்பவம் அனைத்து தமிழக மக்களின் நெஞ்சை உலுக்குகின்ற சம்பவமாக உள்ளது.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
கரூர் சம்பவம் தொடர்பில் சி.பி.ஐ விசாரணை அவசியம் என்பதே தமிழக மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு போதிய நிவாரணமும், அரச பதவியும் வழங்க வேண்டும். தமிழக அரசின் சார்பில் 10 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படவுள்ளது.
அந்தந்தக் குடும்பங்களுடைய சூழ்நிலைகளைப் பொறுத்து, அதிகமாக நிதி கொடுக்க வேண்டும். இந்த சம்பவத்தைப் பொறுத்தவரை உயிரிழப்பு அதிகமாக உள்ளது.
இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் பாதுகாப்பை முறைப்படுத்த வேண்டும். தமிழக அரசும் கவனமுடன் செயற்பட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
