இந்திய அரசு 2இலட்சம் இழப்பீடு

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூர் மாவட்டத்தில் நடத்திய பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்திய அரசு 2இலட்சம் இழப்பீடு வழங்குகிறது.

இந்திய பிரதமர் மோடி இந்த நிவாரணம் குறித்து அறிவித்துள்ளார்.

​இக் கூட்டத்தில் உயிரிழந்த 39 பேரின் குடும்பங்களுக்குத் தலா ரூ.2 இலட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மோடி அறிவித்துள்ளார்.

​மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபா நிதியுதவி வழங்கப்படும் என்றும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​சமூக ஊடகங்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்திற்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.