நிபந்தனையின்றி விடுதலையாக ஆலயங்களில் விசேட பூஜை!

கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

நீரிழிவு, சிறுநீரகம், உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட கோளாறுகள் சிக்கலாக இருப்பதால் மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பின் கீழ் திரு. ரணில் விக்கிரமசிஙகவுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வெலிக்கடை சிறைச்சாலை ஆஸ்பத்திரியிலிருந்து அவர் மருத்துவர்களின் சிபாரிசுக்கு அமைய கொழும்பு தேசிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.