இன்நு அதிகாலை இடம்பெற்ற பொரலஸ்கமுவை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார் என்றும் மற்றொருவர் காயமடைந்தார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொரலஸ்கமுவை மாலனி புளத்சிங்கள வீதியில் நடந்துசென்றுகொண்டிருந்த இளைஞர்கள் இருவர் மீது முச்சக்கர வண்டியில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திள்ளனர்.
இதில் இளைஞர்கள் இருவரும் படுகாயமடைந்து களுபோவிலை மருத்துவமனையில் சேரக்கப்பட்டனர். அங்கு ஒருவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கல்கிஸை டெம்பிளர்ஸ் வீதியைச் சேர்ந்த 21 வயது இளைஞராவார்.
பொரலஸ்கமுவையில் நடந்த இசைக் கச்சேரியைப் பார்த்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இசைக்கச்சேரியின்போது இளைஞர்கள் சிலருடன் முரண்பாடு ஏற்பட்டதாகவும் அதற்குப் பழிவாங்கும் நோக்குடன் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
