மட்டக்களப்புவில் புதிய கால்நடை வைத்திய அலுவலகம் அமைப்பதற்காக இன்று (21) அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது.
60 வருடங்களுக்குப் பின்பு புதிதாக அமைக்கப்பட உள்ள மட்டக்களப்பு மாவட்ட அரச கால்நடை வைத்திய அலுவலகத்திற்கான அடிக்கல் இன்று காலை கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் எம். ஏ. எம் சுல்பிகா அபூபக்கர் தலைமையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரச கால்நடை வைத்திய அலுவலகத்திற்கான புதிய கட்டடம் சுமார்40 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதில் ஊழியர்களுக்கான விடுதி வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.
இந்த வைபவத்திற்குப் பிரதம அதிதியாக மாவட்ட ஆளுநரின் இணைப்பாளர் அப்துல்லா கலந்து கொண்டார்
விவசாய அமைச்சின் செயலாளர் அஸ்வின் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பணிப்பாளர் டாக்டர் எம் ஏ ஹதி, மட்டக்களப்பு மாவட்ட கால்நடை வைத்தியர்கள், அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்
மிக நீண்ட நாள் தேவையாக இருந்து வந்த இந்தக் கட்டட நிர்மாணம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் தற்போது நிறுவப்பட உள்ளது.
மட்டக்களப்புவில் புதிய கால்நடை வைத்திய அலுவலகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில், மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.




மட்டக்களப்பு வரதன்

