சூதாட்ட ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் திருத்தங்களுடன் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
பந்தயம் பிடித்தல், சூதாட்ட நிறுவனங்களைத் தரப்படுத்தல், சமூக சீர்கேட்டைக் குறைத்தல், சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்தல், பொருளாதார வளர்ச்சியை விரிவாக்கல் போன்ற விடயங்கள் ஒழுங்குபடுத்தப்படும்.
இதற்கேற்றவாறு சூதாட்ட ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை உருவாக்கப்படும். அதற்கு வழிவகுக்கும் இந்தச் சட்டமூலத்தைப் பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.
இந்தச் சட்டமூலத்தின் மீது ஆளுந்தரப்பு, எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். நிறைவில் திருத்தங்களுடன் சட்டமூலம் நிறைவேறியது.

