நல்லதண்ணி-மஸ்கெலியா வீதியில் இரும்பு வேலி தேவை

நல்லதண்ணி-மஸ்கெலியா வீதியில் இரும்பு வேலி தேவை வலியுறுத்தப்பட்டுள்ளது.

நல்லதண்ணி மஸ்கெலியா பிரதான வீதி கடந்த வருடம் காபட் இடப்பட்டது. அவ்வாறு காபட் இடப்பட்டுச் செப்பனிட பட்ட பிரதான வீதியில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

குறிப்பாக லக்சபான பகுதியில் வளைவுகளில் பாரிய பள்ளத்தாக்கு உள்ளது அத்துடன் ஒரு சில பகுதிகள் மவுஸ்சாகலை நீர்த் தேக்க கரையோர பகுதிகளாகும்

எதிர் வரும் டிசம்பர் மாதத்தில் சிவனடிபாத மலை பருவகாலம் ஆரம்பித்தவுடன் அதிக அளவில் வாகனங்கள் வந்து செல்லும் சாலையானதால், இரும்பினால் செய்யப்பட்ட நிரந்தரப் பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும்.

இதற்கான பணிகளை நோர்வூட் பிரதேச வீதி அபிவிருத்தி அதிகாரசபை மேற்கொள்ள வேண்டும்.

மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்