போதைப்பொருள் முற்தடுப்பு வேலைத்திட்டம்

பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட போதைப்பொருள் முற்தடுப்பு வேலைத்திட்டம் மட்டக்களப்புவில் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

Clean Srilanka நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சின் நிதி அனுசரணையுடன் பொதுமக்கள் பாதுகாப்பு, பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சும், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையும் இணைந்து இதனை ஆரம்பித்துள்ளன.

மட்டக்களப்பு கல்வி வலய உளவளத்துணை ஆசிரியர்களுக்கான மூன்று நாள் பயிற்றுனர்களுக்கான வதிவிடப் பயிற்சி பட்டறை மட்டக்களப்பு சர்வோதயா பயிற்சி நிலையத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பயிற்சிப் பட்டறை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்ச்சியில் மாவட்ட செயலக போதைப்பொருள் முற்தடுப்பு பிரிவு மாவட்ட இணைப்பாளர் ப.தினேஸ், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இப் பயிற்சி நெறியின் வளவாளராக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பாளர் எம். எம். ஜீ. வீ. எம். றஷாட் கலந்து கொண்டார்.

சா. நடனசபேசன்