ஜனாதிபதி சிறப்புரிமை நீக்கத்திற்கு எதிராக மூவர் வழக்கு தாக்கல் செய்திருப்பதாகவும் அவற்றின் பிரதிகள் தமக்குக் கிடைக்கப்பெற்றிப்பதாகவும் சபாநாயகர் அறிவித்துளளார்.
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று வழக்குகளின் பிரதிகள் தமக்குக் கிடைத்திருப்பதாக சபை அமர்வு ஆரம்பத்தின்போது சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்தின குறிப்பிட்டார்.
ஜனாதிபதி சிறப்புரிமை நீக்கத்திற்கான சட்டமூலம் அண்மையில் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது விரைவில் விவாதிக்கப்படவுள்ளது.
இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், முன்னாள் ஜனாதிபதிகளுக்கான கொடுப்பனவுகள், உத்தியோகபூர்வ இல்லங்கள் இல்லாமற்போகும். ஓய்வூதியம் மாத்திரமே எஞ்சும்.

