நுழைவுச் சீட்டுகள் வழங்குவதில் கட்டுப்பாடு

விமான நிலைய நுழைவுச் சீட்டுகள் வழங்குவதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) உச்சநேரங்களில் பயணிகளின் வசதியை உறுதிப்படுத்தவும், நெரிசலைத் திறம்பட நிர்வகிக்கவும் இந்தப் புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமைகளில் இரவு 10:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை, புறப்பாட்டு மண்டபத்திற்கு வருகையாளர்களுக்கான நுழைவு சீட்டுகள் வழங்கப்படமாட்டா.

இந்த நடவடிக்கை பயணிகள், விமான நிலைய பணியாளர்களின் வசதியை உறுதிப்படுத்துவதற்காக அமல்படுத்தப்படுவதாக விமான நிலைய, விமான சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது.