பாராட்டு விழாவும் சின்னம் சூட்டும் விழாவும்

கவிதைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவிக்கான பாராட்டு விழாவும் சின்னம் சூட்டும் விழாவும் ஆத்தளை தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

கண்டி, வத்தேகம கல்வி வலயத்தில் பன்விலை கல்விக் கோட்டத்தில் அமைந்துள்ள ஆத்தளை தமிழ் வித்தியாலய பாடசாலை வரலாற்றிலே முதன் முறையாக இவ்வாண்டு தமிழ்மொழித்தினப் போட்டிகளில் வலய மற்றும் மாகாணப் போட்டிகளில் முதலிடம் பெற்றுத் தேசிய மட்ட கவிதை ஆக்கப் போட்டிக்கு செல்வி பி. கனிஷ்கா தெரிவானார்.

மாணவி செல்வி கனிஷ்காவிற்கான பாராட்டு விழாவும் மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் விழாவும் அதிபர் திருமதி எஸ். செல்வகுமாரி தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக வத்தேகம வலய முன்னாள் மேலதிக கல்விப் பணிப்பாளர் ஐ. ஹாசிம், சிறப்பு அதிதியாக வத்தேகம வலய உதவி கல்விப் பணிப்பாளர் ஏ. ரஹிம் கலந்துகொண்டனர்.

ஆசிரிய ஆலோசகர் திருமதி கே. கோபாலகிருஸ்ணன், நலன்விரும்பிகளான பன்விலை பிரதேச தொழிலதிபர்களான வை. பிரபாகரன், காமினி திசாநாயக்க, மாத்தளை பிரதேச தொழிலதிபர் டி பிரபாகரன், செல்லதுரை கலைமகள், பாடசாலை ஆசிரியர்கள் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

பன்விலை நிருபர் ம.நவநீதன்