மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள துறைநீலாவணை மகாவித்தியாலயத்தின் கணித, விஞ்ஞான பூங்கா திறப்பு விழாவும் சாதனையாளர் பாராட்டு விழாவும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பழையமாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதிபர் சா.கிருபைராசா தலைமையில் (16.08.2025) சனிக்கிழமை விழா நடைபெற்றது.
இவ் விழாவின் முதன்மை அதிதியாக பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரன் கலந்துகொண்டார்.
விசேட அதிதிகளாக பிரதிக் கல்விப்பணிப்பாளர்களான பு.திவிதரன் ஆர்.ஜீவானந்தராஜா, இஎஸ். சுரேஸ், பாடசாலைகளின் அதிபர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பாடசாலையின் பழையமாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தினர் கலந்து சிறப்பித்தனர்.
பாடசாலை வளாகத்தில் அமைக்கப்பட்ட கணித விஞ்ஞான பூங்காவை முதன்மை அதிதியான பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரன் நாடாவை வெட்டித் திறந்து வைத்தார்.
பொதுப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கமைய கல்விச் சாதனை படைத்த மாணவர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கிக்கௌரவிக்கப்பட்டது.
அதிதிகளையும் பூங்கா அமைப்பதற்கு நிதி அனுசரணை வழங்கிய ரமேஸ் அவர்களையும் பாடசாலையின் பழைய மாணவர்கள் கௌரவித்தனர்.





எஸ். நடனசபேசன்

