சவூதி தூதுவர் வெளிவிவகார பிரதியமைச்சர் சந்திப்பு

சவூதி தூதுவர் வெளிவிவகார பிரதியமைச்சர் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலீத் ஹமூத் அல்-காஹ்தானி, வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பில் இருநாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடினர்.

இக்கலந்துரையாடலில், முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல், இரு நாடுகளுக்குமிடையே நீண்டகாலமாக நிலவி வரும் நட்புறவை மேலும் விரிவுபடுத்தல் குறித்தும் விசேடமாகக் கவனம் செலுத்தப்பட்டது.

சவூதி தூதுவர் வெளிவிவகார பிரதியமைச்சர் சந்திப்பு

(எஸ். சினீஸ் கான்)