காத்தான்குடியில் மீண்டும் சமிக்ஞை விளக்கு

காத்தான்குடியில் மீண்டும் சமிக்ஞை விளக்கு ஒளிர்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காத்தான்குடி பிரதான வீதியில் சமிக்ஞை விளக்குகளை மீள ஒளிரச்செய்ய பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் கோரிக்கைக்கு இணங்க கள மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 02.07.2025 அன்று நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், பெருந்தெருக்கள் அமைச்சர் பிமல் ரத்னாயக்கவிடம் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் இதற்கான கோரிக்கையை முன்னைத்தார்.

நீண்டகாலமாகக் காத்தான்குடி பிரதான வீதியில் ஒளிராமல் பயன்பாடின்றிக் காணப்படும் வீதி சமிக்ஞை விளக்கு கட்டமைப்பை மீள இயங்க வைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

அதற்கிணங்க, இந்த விடயத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர், உத்தியோகத்தர்கள் அடங்கிய குழு இன்று (15.) காத்தான்குடிக்கு விஜயம் செய்து, கள மதிப்பீட்டை மேற்கொண்டது.

அப்போது காத்தான்குடி தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், நகரசபை உருப்பினர் இ. எம். றுஸ்வின், நகர சபை உத்தியோகத்தர்களும் உடனிருந்தனர்.

கலாநிதி ஹிஸ்புல்லாஹ், பெருந்தெருக்கள், வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக இருந்த காலப்பகுதியில் இச்சமிக்ஞை விளக்கு பொருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தற்போது காத்தான்குடியில் மீண்டும் சமிக்ஞை விளக்கு ஒளிர்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எஸ் சினிஸ்கான்