பொலிஸ் மாஅதிபர் கடமைகளைப் பொறுப்பேற்றார்

புதிய பொலிஸ் மாஅதிபர் கடமைகளைப் பொறுப்பேற்றார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபராகக் கடமையாற்றி வந்த சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய புதிய பொலிஸ் மாஅதிபராக இன்று காலை கடமைகளை பொறுப்பேற்றார்.

பொலிஸ் தலைமையகத்தில் அவர் கடமைகளைப் பொறுப்பேற்றதாகப் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

தனது கடமைகளின் போது பொலிஸ் துறையின் கௌரவத்தையும் கண்ணியத்தையும் பாதுகாக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வதாகப் பதவியேற்றுக் கருத்து தெரிவித்தார்.

பொலிஸ் துறையின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கத் தாம் பணியாற்றி வருவதாகவும் இதற்காக பொலிஸ் அதிகாரிகள் அனைவரிடமிருந்தும் உயர் செயல்திறனை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

ஒழுக்கமான பொலிஸ் துறையை நிறுவுவதே தனது ஒரே நோக்கம் என்றும் அதனை மிக உயர்ந்த இடத்தில் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

பொலிஸ் மாஅதிபராக நியமித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் புதிய பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய மேலும் தெரிவித்தார்.