பாடசாலை கட்டடம் கையளிக்கும் நிகழ்ச்சி

மஸ்கெலியா மொக்கா வின்னர் தமிழ் வித்தியாலயத்தில் 20 இலட்சம் ரூபாய் நிதியில் புனரமைக்கப்பட்ட பாடசாலை கட்டடம் கையளிக்கும் நிகழ்ச்சி எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறுகிறது.

மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்துடன் இணைந்து ஆஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்டியங்கும் இந்திய வம்சாவளி இலங்கைத் தமிழர் அமைப்பின் நிதிப் பங்களிப்பில் இந்தக் கட்டடம் புனரமைக்கப்பட்டுள்ளது

ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட கோட்டம் மூன்றில் உள்ள இந்தப் பாடசாலை கட்டடம். எதிர்வரும் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் பாடசாலையின் பயன்பாட்டிற்குக் கையளிக்கப்படுகிறது.

பாடசாலை கட்டடம் கையளிக்கும் நிகழ்ச்சி

மலையக கல்வி அபிவிருத்த மன்றத்துடன் இணைந்து இந்திய வம்சாவளி இலங்கைத் தமிழர் அமைப்பு மலையகத்தில் பல்வேறான கல்விபபணிகளை கடந்த 20 வருடங்களாக முன்னெடுத்து வருகின்றது.

மொக்கா வின்னர் தமிழ் வித்தியாலய சமூகத்தின் தேவை உணர்ந்து மேற்படி வேலைத்திட்டம் மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை கட்டடம் கையளிக்கும் நிகழ்ச்சியில் மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் உறுப்பினர்கள், ஹட்டன் கல்வி வலய அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், நலன் விரும்பிகள் கலந்துகொள்கிறார்கள்.

மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்