இலங்கை இந்திய கடற்படை கூட்டுப்பயிற்சி

இலங்கை இந்திய கடற்படை கூட்டுப்பயிற்சி இன்று முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை கொழும்புவில் நடைபெறுகிறது.

12ஆவது தடவையாக நடைபெறும் இந்தக் கூட்டுப் பயிற்சியின் ஓர் அங்கமான துறைமுகசார் பயற்சி இன்று கொழும்புவில் ஆரம்பமாகிறது.

கொழும்புவின் புறநகரில் கடல்சார் பயிற்சிகள் எதிர்வரும் 17ஆம் 18ஆம் திகதிகளில் நடைபெறுகின்றன.

இந்தப் பயிற்சிகளில் இந்திய கடற்படையின் ஐஎன்ஸ் ஜோதி, ஐஎன்எஸ் ராணா போர்க் கப்பல்கள் பங்குபற்றுகின்றன.

இலங்கை கடற்படையின் விஜயபாகு, சயுர ஆகிய கப்பல்கள் பங்கேற்கின்றன.

தவிரவும், இலங்கை விமானப் படையின் பெல் 412 ஹேலிகொப்டர்களும் பயிற்சியில் பங்கேற்கின்றன.

கடந்த ஆண்டு 2024 டிசம்பர் 17 -20 வரை விசாகப்பட்டணத்தில் பயிற்சி நடைபெற்றது.

  • இந்திய உயர்ஸ்தானிகராலய ஊடகப் பிரிவு