மீகொடை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழந்தார் என்று மீகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீகொட, ஆட்டிகல மாவத்தையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் இன்று (12) மதியம் உயிரிழந்தார்.
ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுன்கொட்டுவ மீது காரில் வந்த குழுவினர் இன்று பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த அவர், ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
பாதுக்கை, வட்டரெக பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
