பொலிஸ் மாஅதிபர் நியமனத்திற்கு அனுமதி

இலங்கையின் 37அவது புதிய பொலிஸ் மாஅதிபர் நியமனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் 37 ஆவது பொலிஸ் மாஅதிபராக பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை இன்று அனுமதி வழங்கியுள்ளது.

அரசியலமைப்புப் பேரவை இன்று (12) சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடியது.

புதிய பொலிஸ் மாஅதிபராக பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த வாரம் கூடிய அரசியலமைப்பு பேரவைக்கு பரிந்துரைத்திருந்தார்.