ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் நாடு திரும்பினார்.
அவுஸதிரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் (Samantha Joy Mostyn) உள்ளிட்ட குழுவினர் இன்று (10) காலை தமது தாயகம் திரும்பிச் சென்றனர்.
உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, திருமதி சமந்தா ஜோய் மோஸ்டின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூராய ஆகியோரைச் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தினார்.
அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது, இரு நாடுகளின் பரஸ்பர அனுகூலங்களை வழங்கும் தற்போதுள்ள ஒத்துழைப்புத் துறைகளை விரிவுபடுத்துவது குறித்து இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது
சமந்தா ஜோய் மோஸ்டின், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொண்டார்.
பண்டாரகம, மிரிஸ்ஸ, வெலிகமவில் அவுஸ்திரேலியாவின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் பல திட்டங்களைப் பார்வையிட்டார்.
அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் நாடு திரும்பினார் என்பதோடு அவரை வழியனுப்பும் நிகழ்ச்சியில் விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சர் கிருஷாந்த அபேசேன, வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள் குழுவும் இணைந்து கொண்டனர்.
