மார்கஸ்தோட்ட கருமாரியம்மன் ஆலயத்தில் வரலட்சுமி பூஜை

நுவரெலியா மார்கஸ்தோட்ட கருமாரியம்மன் ஆலயத்தில் வரலட்சுமி பூஜை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டுக் கும்ப பூஜை என்பன இடம்பெற்று லட்சுமிக்கு கும்ப நீர் அபிஷேகம் இடம் பெற்றது.

தொடர்ந்து சுமங்கலிப் பெண்களால் விளக்கு ஏற்றப்பட்டு சுமங்கலி பூஜை செய்யப்பட்டு லக்ஷ்மிக்கு அரிசியால் அபிஷேகம் செய்யப்பட்டது.

லக்ஷ்மியின் திருவுருவச் சிலையைச் சுமங்கலிப் பெண்கள் சுமந்த வண்ணம் ஆலயத்தைச் சூழ உள் வீதி உலா இடம்பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்