வரி நிலுவைகளை அறவிடும் பணிகள்

மட்டக்களப்பு மாநகர சபையினால் கடந்த வருட வரி நிலுவைகளை அறவிடும் பணிகள் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் இன்று ஆரம்பமாகின.

கடந்த வருடங்களில் மாநகர சபையின் 20 வட்டாரங்களில் செலுத்த வேண்டிய வரிப்பணம் 90 மில்லியன் ரூபாய் நிலுவையுள்ளதனால் அவற்றை மாநகர சபை உத்தியோகத்தர்கள் ஐந்து குழுவாக பிரித்து அறவிடுகின்றனர்.

மேலும் கடந்த 2022, 2023, 2024 ஆண்டுகளில் மட்டும் 62 மில்லியன் ரூபாய் நிலுவை அறவிடாது காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மக்களின் வசதி கருதி மக்கள் வீடுகளுக்குச் சென்று நிலுவைகளை அறவிடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிகழ்வில் பிரதி முதல்வர் வை.தினேஸ்குமார், மாநகர சபையின் ஆணையாளர் என். தனஞ்செயன், கணக்காளர்கள், நிருவாக உத்தியோகத்தர் எனப் பலர் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு வரதன்