செம்மணி புதைகுழி அகழ்வு 21ஆம் திகதி

செம்மணி புதைகுழி அகழ்வு 21ஆம் திகதி அளவில் மீள ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் இருந்து சிசு ஒன்றின் எலும்புக் கூட்டுத் தொகுதி நேற்று (6) யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ. ஏ. ஆனந்தராசா முன்னிலையில் அகழ்ந்து எடுக்கப்பட்டது.

செம்மணி புதைகுழியில் அகழ்வுப் பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 41 நாள்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சிறுவர்கள், சிசுக்கள் உள்ளிட்ட 133 எலும்புக் கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இதுவரையில் 147 எலும்புக் கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 16 நாள்களாக முன்னெடுக்கப்பட்ட இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி அகழ்வுப் பணிகள் நேற்றுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

அகழ்வுப் பணிகள் எதிர்வரும் 21ஆம் திகதியளவில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.