கம்பகாவில் பத்து மணித்தியால நீர் வெட்டு

கம்பகாவில் பத்து மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு எதிர்வரும் சனிக்கிழமை (9) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை காலை 10 மணி தொடக்கம் இரவு 8 மணி வரையான 10 மணித்தியாலம் இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

நிட்டம்புவ, கந்தஹேன, மாபகொல்ல, கோங்கஸ்தெனிய, பின்னகொல்லவத்த, கோலவத்த, கொரகதெனிய, ரன்பொகுணுகம வீடமைப்பு திட்டம், படலீய, அத்தனகல்ல, பஸ்யால, ஊராபொல, திக்கந்த, மீவிடி கம்மானய, மாஇம்புல, மாதலான, ஹக்கல்ல, அலவன, கலல்பிடி, எலமுல்ல ஆகிய பிரதேசங்களில் இந்த நீர் விநியோகத் தடை அமுலில் இருக்கும்.

பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருந்துவதாகவும், போதுமான தண்ணீரை முன்கூட்டியே சேமித்து வைக்குமாறும் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபை கேட்டுக் கொண்டுள்ளது.