முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகள் இரத்தாகும் சட்டமூலம்

அரசியலமைப்பு பேரவை இன்று கூடுகிறது. இன்று பிற்பகல் 1.30 இற்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் அரசியலமைப்பு பேரவை கூடுகிறது.

இதேவே​ளை, தேசபந்து தென்னகோனைப் பொலிஸ் மாஅதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கடிதம் நேற்று (6) அவரிடம் கையளிக்கப்பட்டது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் அவரது வீட்டிற்குச் சென்று தொடர்புடைய கடிதத்தை வழங்கியதாக அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தேசபந்து தென்னகோனைப் பொலிஸ் மாஅதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 177 வாக்குகள் கிடைத்ததோடு, எதிராக எந்த வாக்கும் வழங்கப்படவில்லை.

இருப்பினும், பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா மட்டுமே பிரேரணைக்கு வாக்களிப்பதில் இருந்து விலகி இருந்தார்.

இது தொடர்பான கடிதம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, நேற்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் கையொப்பமிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தேசபந்து தென்னகோனின் பதவி நீக்கக் கடிதத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி அனுப்பியுள்ளார்.