அமெரிக்காவின் வரிக்குறைப்பு இறுதி செய்யப்படவில்லை

அமெரிக்காவின் வரிக்குறைப்பு இறுதி செய்யப்படவில்லை என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கை மீதான அமெரிக்கா விதித்த பரஸ்பர வரியை 20% வீதமாகக் குறைப்பதற்கான எந்த ஒப்பந்தமும் இறுதி செய்யப்படவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அமெரிகா விதித்த வரியை மேலும் குறைப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் பாராளுமன்றில் இன்று (7) விசேட உரையொன்றை ஜனாதிபதி நிகழ்த்தினார்..

இதுவரை இடம்பெற்ற கலந்துரையாடல்களில் சில உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாகவும், அதன் விளைவாக வரி 20% வீதமான குறைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

எங்கள் வர்த்தக இடைவெளியின் அடிப்படையில் எங்களுக்கு 44% வீதம் கிடைக்கிறது. அதுதான் அவர்களின் கொள்கை.

அதை 44% வீதத்திலிருந்து 20% வீதமாக குறைப்பது அவர்களுக்கும் எங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல்கள், ஒப்பந்தத்தின் ஒரு முக்கியமான விளைவு என்று நாங்கள் நினைக்கிறோம்.

அவர்கள் அதைப் பற்றி எந்த முடிவுகளையும் எடுப்பதற்கு முன் சில HS CODE ஐ விடுவிக்க வேண்டும்.

இந்த வரி விதிப்பினால் பாதிக்கப்பட்ட தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோருடன் நாங்கள் கலந்துரையாடினோம்.

ஒரு குறிப்பிட்ட துறையைத் திறப்பது குறித்து நாங்கள் விவாதித்தபோது, சம்பந்தப்பட்ட பங்குதாரர்களை அழைத்து அதன் தாக்கம் குறித்து தொடர்ந்து பேசி எங்கள் குழு இந்த வெற்றியைப் பெற்றது.

எனவே, இதில் பங்கேற்கக்கூடிய ஒவ்வொரு பங்குதாரரையும் ஈடுபடுத்த நாங்கள் பொறுப்புடன் செயல்பட்டோம்.

எனவே, அமெரிக்க வரிக் கொள்கையின் அடிப்படையில் பொருளாதார சரிவை நீங்கள் எதிர்பார்த்திருந்தால், அது இப்போது முடிந்துவிட்டது.

அமெரிக்காவின் வரிக்குறைப்பு இறுதி செய்யப்படவில்லை. எங்களுக்கு 20% வீதம் மட்டுமே இருந்தது. அந்த 20% வீதத்தை விடவும் குறைக்க முடியுமா என்பது தொடர்பில் நாங்கள் இன்னும் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.