முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகள் இரத்தாகும் சட்டமூலம்

முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகள் இரத்தாகும் சட்டமூலம் இன்று (07) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதிகள் உரித்துரிமைகள் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான சட்டமூலத்தை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணாயக்கார பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகளை இரத்துச் செய்யும் வகையில், ஜனாதிபதியின் உரித்துரிமைகள் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.

முன்னாள் ஜனாதிபதிகள் உரித்துரிமைகள் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான சட்டமூலம் சமீபத்தில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், தற்போது அதற்கான அங்கீகாரத்தைப் பெறும் வகையில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தேவையான நாள்கள் நிறைவடையாததன் காரணமாக, இன்று (07) சட்டமூலத்தைச் சமர்ப்பிக்க முடியாது என்று எதிர்க்கட்சி சுட்டிக்காட்டியதால் பாராளுமன்றில் அமைதியின்மை ஏற்பட்டது.