இலங்கைக்குச் சுற்றுலா வரும் இஸ்ரேலிய பிரஜைகளால் எந்தச் சிக்கலும் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம் அளித்துள்ளார்.
இஸ்ரேலிய நாட்டினருக்கு இலவச விசாக்களை வழங்க வெளியுறவு அமைச்சின் உயர் அதிகாரிகளிடமிருந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக தகவல்கள் வௌியாகி வருகின்றன.
இது தொடர்பில் இன்று (05) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் விளக்கம் அளித்தார்.
வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலா அமைச்சின் தலையீட்டுடன் சுற்றுலாப் பயணிகளின் வருகை, அவர்கள் நாட்டிற்குக் கொண்டு வரும் டொலர் வருமானத்தின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் தயாரிக்கப்படுகின்றன.
“நாம் எந்த நாட்டையும் வேறு கோணத்தில் பார்த்ததில்லை. நீங்கள் பார்த்தால், இவற்றில் வெவ்வேறு நாடுகள் உள்ளன.
இந்த நாடுகளைத் தேர்ந்தெடுப்பதற்கான அடிப்படை நாம் பெறும் டொலர் வருமானத்திலும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையிலும் தங்கியுள்ளது.
முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் காலத்தில் இஸ்ரேலில் இருந்து வரும் விமானங்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டன.
கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து இஸ்ரேலிய விமானங்கள் நாட்டிற்கு வரவில்லை
ஒருவேளை இந்த ஆண்டின் பிற்பகுதியில் இஸ்ரேலிய விமானங்கள் நாட்டிற்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கலந்துரையாடப்பட்டு வருகிறது.
அறுகம்பைப் பகுதியில் இஸ்ரேலியர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படுவது அவர்கள் சுற்றுலாப் பயணிகள் என்பதற்காக மட்டுமே. அதற்காக பொலிஸாரும் முப்படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் கூடும் இடங்கள் இருந்தால், அரசாங்கம் அவர்களைப் பொதுவான சுற்றுலாப் பயணிகளாகக் கருதி அவர்களுக்குப் பாதுகாப்பை மட்டுமே வழங்குகிறது.
சுற்றுலாப் பயணிகள் தனியாகவோ அல்லது குழுக்களாகவோ எங்கும் கூடினால், அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு. எனவே, இது சிறப்புப் பாதுகாப்பு அல்ல.
இங்கு வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை. இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேலிய பிரஜைகளால் எந்தச் சிக்கலும் இல்லை ஏற்பட வாய்ப்பில்லை.
இலங்கைக்கு வரும் அனைத்து வெளிநாட்டினருக்கும், அவர்களின் நாட்டைப் பொருட்படுத்தாமல், பாதுகாப்பை வழங்குவதற்கு நாங்கள் முன்னுரிமை அளித்துள்ளோம்” என்றார்.
