ஹற்றனில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் செயலமர்வு நேற்றுக் காலை 10 மணிக்கு நுவரெலியா மாவட்ட அகில இலங்கை சமாதானப் பேரவையின் அமைப்பாளர் திருமதி. இரேசா தலைமையில் ஹட்டன் கிறித்தவ ஆலயத்தில் இடம்பெற்றது.
நிகழ்ச்சியில் நுவரெலியா மாவட்ட சமாதான பேரவையின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .
வைபவத்தில் பௌத்த மத தேரர், சைவமதத் தலைவர்கள், இஸ்லாமிய மத மௌலவிகள், கிறித்தவ சமய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இனங்களுக்கு இடையே ஏற்படும் நல்லிணக்கம் சம்பந்தமான கலந்துரையாடல் மற்றும் தீர்வு பற்றி இங்கு ஆய்வு செய்ய பட்டது.




மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்
