பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. சுபாஷினி இந்திகா குமாரி லியனகே - படம் ஊடகம்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்ட அனைத்து மேலதிக மேலதிக வகுப்புகள் 6ஆம் திகதியுடன் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் எதிர்வரும் 06 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தடையை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இம்முறை பரீட்சை 2,787 நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
