தேயிலைக் கொழுந்து திருடிய சின்ன துரை ஒருவர் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
1,200 கிலோ கிராம் அடங்கிய 20 பொதிகள் அடங்கிய No. 1 டஸ்ட், 60 கிலோ கிராம் தேயிலை தூளை திருடிய குற்றச்சாட்டை அவர் ஒத்துக்கொண்டதால் அவரை நீதவான் பிணையில் விடுவித்தார்.
ஆர்.பி.கே.பிளான்டேசனுக்கு உரித்தான மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்ட தேயிலை தொழிற்சாலையில் இருந்து 840,000 ரூபாய் பெறுமதியான No. 1 டஸ்ட், தேயிலை தூள் 60 கிலோ கிராம் நிறை கொண்ட 1,200 கிலோ கிராம் அடங்கிய 20 பொதிகள் களவாடப்பட்டுள்ளன.
இவை கடந்த ஜூலை 23 ஆம் திகதி களவாடப்பட்டுள்ளதாகத் தோட்ட முகாமையாளர் நிலுஷான் மதுசங்க ஜயவீர , மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவின் பணிப்புக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்க பட்டு தேயிலை தொழிற்சாலையில் பொருத்த பட்டு இருந்த சீ.சீ.டி வி கெமராக்கள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது..
23.07.2025.அன்று இரவு 8.30.மணி தொடக்கம் 10.30 மணிக்குள் தேயிலை தூள் அடங்கிய 20 பொதிகள் தோட்ட உதவி முகாமையாளரால் லொறிக்கு ஏற்றப் பட்டது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து தோட்ட உதவி முகாமையாளரை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்து ஹட்டன் நீதிமன்றில் ஆஜர் படுத்தினர். அவர், ஜூலை 25 ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
தேயிலைத் தூளை திருடியதை உதவி முகாமையாளர் (சின்ன துரை) ஒப்புக் கொண்டதையடுத்து, களவாடிய 1200 கிலோ கிராம் தேயிலை தூளுக்கான ரூபாய் 840,000 பணத்தை கம்பெனிக்கு செலுத்திய பிரவுன்சீக் தோட்ட உதவி முகாமையாளர். உரிய பற்றுச்சீட்டை நீதி மன்றுக்குச் சமர்ப்பித்துள்ளார்.
அதனையடுத்து 500,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரபிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
தேயிலைக் கொழுந்து திருடிய சின்ன துரை அவர்களை எதிர்வரும் 10.09.2025 அன்று மன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டார்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்
