பொரலஸ்கமுவை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்

கண்டியில் அரசியல்வாதியும் குடும்பத்தவர்களும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கண்டி-யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவரின் குடும்பமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

தமது மனைவிக்கும் மகளுக்கும் தூக்க மாத்திரைகளைக் கொடுத்துவிட்டுத் தாமும் தற்கொலை செய்துகொண்டுள்ளாரென்று பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தனது மனைவி (44வயது) மூத்த மகள் (17 வயது) ஆகியோருக்குத் தூக்க மாத்திரைகளைக்; கொடுத்துள்ளார். 13வயது நிரம்பிய இளைய மகள் பாடசாலை சுற்றுலா சென்று இன்று காலை வீடு திரும்பினார்.

அவருக்கும் ஏதோ மாத்திரைகளைக் கொடுத்தபோது அவர் அதனை மறுத்துவிட்டதாகவும் பின்னர் தந்தை தூக்கிட்டுக்கொண்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இளைய மகள் அயலவர்களுக்கு வழங்கிய தகவலையடுத்து அவர்கள் வந்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கடன் கொடுக்கல் வாங்கல் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அவர் எழுதியதாகக் கூறப்படும் நான்கு பக்கக் கடிதமொன்றைப் பொலிஸார் கண்டறிந்துள்ளளர்.

“விஜேசிங்கே, உன்னை சபிக்கிறேன்..நீ எப்போதும் என்னைக் கொலை செய்வதாக மிரட்டி, வீட்டை விற்க முடியாவிட்டால் உன்னைக் கொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறாய்.

ஒரு நாள் என் மகளின் பாடசாலைக்கு அருகில் வந்து மகளுடன் இருந்தபோது, என் காலரைப் பிடித்து வீட்டிற்கு வந்து கையெழுத்திடச் சொன்னான்.

நான் கையெழுத்திட முடியாது என்று சொன்னதும், அவன் என் தலையில் இரும்பினால் அடித்தான். என் நெற்றியில் அந்த வடு இன்னும் இருக்கிறது.” 

இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எனினும், அவரது மனைவியும் மகளும் எவ்வாறு இறந்தார்கள்; ஏன் இறந்தார்கள் என்ற காரணம் இன்னும் துலங்கவில்லை.

அரசியல்வாதியும் குடும்பத்தவர்களும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கண்டி- யஹலத்தன்னைப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்துப் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.