பலஸ்தீனத்தை ஒரு நாடாக பிரான்ஸ் அங்கீகாரம்

பலஸ்தீனத்தை ஒரு நாடாக பிரான்ஸ் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், பலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளார்.

பலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பரில் வெளியிடப்படும்.

நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தனது ட்விட்டர் கணக்கில் ஒரு பதிவில், காசா பகுதியில் போரை முடிவுக்குக் கொண்டு வந்து பொதுமக்களைக் காப்பாற்றுவது அவசரமானது என்றும், உடனடியாக போர் நிறுத்தம் எட்டப்பட வேண்டும்,

அமைதி ஏற்படுத்தப்பட வேண்டும், அனைத்து பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி கூறியுள்ளார்.

காசா மக்களுக்கு தற்போது பாரிய மனிதாபிமான உதவி தேவைப்படுவதாகவும் பிரான்ஸ் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஹமாஸ் இயக்கத்தின் ஆயுதங்களைக் களைய வேண்டும். காசாவைக் கட்டியெழுப்ப வேண்டும். அதன் பின்னர் பலஸ்தீன அரசை உருவாக்க வேண்டும். மத்திய கிழக்கின் பாதுகாப்புக்கு இஸ்ரேலைத் தவிர வேறு வழியில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், பிரான்சின் முடிவை அமெரிக்கா கடுமையாக நிராகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பலஸ்தீனத்தை ஒரு நாடாக பிரான்ஸ் அங்கீகாரம் வழங்கியுள்ளபோதிலும் பிரான்ஸ் ஜனாதிபதியின் முடிவை வன்மையாகக் கண்டிப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு தெரிவித்துள்ளார்.