ஜனாதிபதி அனுர மாலைதீவு விஜயம் மேற்கொள்கிறார்.
மாலைதீவு ஜனாதிபதியின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, எதிர்வரும் திங்கட்கிழமை (28), மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்வதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இவ்விஜயம், இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் நடைபெறுகிறது.
பொருளாதாரம், சுற்றுலா, இருதரப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல முக்கிய துறைகள் தொடர்பான கலந்துரையாடல்கள் இந்த விஜயத்தின்போது இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விஜயத்தின் முழுமையான திட்டவட்டக் கட்டமைப்புகள் விரைவில் அறிவிக்கப்படும்.

