சர்வதேச மது ஒழிப்பு நாள்

மதுபானம் விற்கவும் அருந்தவும் பெண்களுக்குத் தடையில்லை! என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மதுபான விடயத்தில் பெண்களுக்கு சமவுரிமையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

பெண்கள் மதுபானம் விற்கவும் சில்லறை விற்பனை நிலையங்களில் மது அருந்தவும் மது உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரியவும் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பெண் செயற்பாட்டாளரான பேராசிரியை ஒருவரும் மேலும் 14 பேரும் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த இணக்கத்தின் அடிப்படையில் வழக்கை முடிவுறுத்தியுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் தடைகளை நீக்குவதன் மூலம் உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் பெண்கள் மதுபானத்தைக் கொள்வனவு செய்ய முடியும்; சில்லறை விற்பனை நிலையங்களில் மது அருந்த முடியும்; மதுபான உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரிய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் – 2018இல்- பெண்கள் மது விற்கவும் உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரியவும் விற்கவும் தடைவிதித்து வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டிருந்தது.

அந்த வர்த்தமானிக்கு இடைக்கால தடை விதிக்குமாறு கோரி 15 பேர் கொண் பெண்ணுரிமை அமைப்பு அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்திருந்தது.

அந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாக கடந்த 2018 ஜூலை ஒன்பதாந்திகதி உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது.

அதன்பிரகாரம் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதியரசர்களான எஸ். துரைராசா, மகிந்த சமயவர்தன, மேனகா விஜேசுந்தர ஆகியோர் இந்த மனுவை நிராகரித்து மேற்கண்ட அடிப்படையில் சமரசம் செய்துவைத்தனர்.

அப்போதைய நிதியமைச்சரும் ஊடகத்துறை அமைச்சருமான மங்கள சமரவீர, நிதியமைச்சின் செயலாளர், அமைச்சரவை அமைச்சர்கள் ஆகியோர் இந்த வழக்கின் பிரதிவாதிகளாகக் குறிபபிடப்பட்டிருந்தனர்.

மதுபானம் விற்கவும் அருந்தவும் பெண்களுக்குத் தடையில்லை என்ற அடிப்படையில் பழைய வர்த்தமானி அறிவித்தலைத் திருத்தி வௌியிட இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதற்கமைய பெண்களுக்கும் மதுபான விடயத்தில் சட்டரீதியாக சமவுரிமை வழங்கப்பட்டுள்ளது.

லக்மால் சூரியகொட

தமிழில் : ஜீவிதன்