மாணவரகள் சென்ற பஸ் விபத்து

கோப்புப் படம்

பெலியத்த – வீரகெட்டிய, பெலிகல்ல பகுதியில் இன்று (23) காலை 7.30 அளவில் பாடசாலை மாணவர்கள் சென்ற பஸ் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சுமார் 16 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து பெலிகல்ல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்,

அவர்களில் சிலர் இப்போது மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனர்..

தற்போது, 13 மாணவர்கள் பெலியத்த, பெலிகல்ல, தங்காலை, வீரகெட்டிய ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.