பங்களாதேஷில் நேற்று இடம்பெற்ற விமான விபத்துக்கு நீதி வழங்கக்கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
செய்திச் சுருக்கம்:
சீனத் தயாரிப்பான F-7 BGI 701 ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
பாடசாலை நேரம் நடந்த இந்தச் சம்பவத்தில் 163 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மாணவர்கள் தீக்காயங்களுடன் ஓடி வரும் காட்சியை ஊடகங்கள் ஒளிபரப்பின.
இந்தச் சம்பவத்தையடுத்து இன்று தேசிய துக்க தினம் அனுட்டிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது!.
அரச, தனியார் நிறுவனங்கள் அனைத்திலும் தேசியக் கொடியைப் பறக்கவிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான வேளையில் பெருந்திரளான பெற்றோர்களும் பாடசாலை வளாகத்தில் தம் பிள்ளைகளை அழைத்துச் செல்வதற்காகக் காத்திருந்தனர்.
தம் கண் முன்னாலேயே பிள்ளைகள் எரிகாயங்களுடன் ஓடி வருவதைப் பார்த்த அந்தப் பெற்றோர் பதை பதைத்துவிட்டனர்.
சம்பவத்தில் 19பேர் உயிழந்ததாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இப்போது 31 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 25 மாணவர்கள் 12 வயதுக்கும் குறைவானவர்கள்.
இந்தச் சம்பவத்தால் மிகவும் மனமுடைந்த நிலையில் பங்களாதேஷ் மக்கள் காணப்படுவதாக ஊடகங்கள் தெரவிக்கின்றன.
இந்த விபத்திற்கு நீதி வழங்கக்கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததால் அமைதியின்மை ஏற்பட்டது. நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் செய்ததாக செய்திகள் கூறுகின்றன.

