தேரரின் இறுதிக்கிரியை 24ஆம் திகதி

அஸ்கிரிய மகாநாயக்க மஹா விகாரையின் அனுநாயக்கராக (உபமகாநாயக்கர்) பதவி வகித்த ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் அமரரானார். அவர் தனது 67 ஆவது வயதில் அமரத்துவம் அடைந்தார்..

தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு (20) அவர் இறையடி சேர்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூகவலயத்தில் நீண்ட காலமாகப் பணி புரிந்த தம்மதஸ்ஸி தேரரின் மறைவு பலரிடையே ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

அவரது இறுதிக்கிரியைகள் தொடர்பான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.