இஸ்ரேலில் இலங்கையர்கள் சென்ற பஸ்ஸில் தீவிபத்து

இஸ்ரேலில் இலங்கையர்கள் சென்ற பஸ்ஸில் தீவிபத்து ஏற்பட்டதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் அறிவித்துள்ளார்.

விவசாயத்துறையில் பணியாற்றும் இலங்கையர்கள் 20 பேர் பயணித்த பஸ் நேற்றுக்காலை தீப்பிடித்துக்கொண்டதாக தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

அப்போது பயணிகள் அனைவரும் பஸ்ஸின் சாளரத்தை உடைத்துக்கொண்டு வெளியேறி உயிரைக் காப்பாற்றிக்கொண்டனர்.

ஒருவருக்கு மட்டும் தீக்காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவத்திற்குப் பின்னர் இலங்கையர்கள் வழமைபோன்று கடமைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.